போராட்டமும் அரசியல் அவலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 08

மலையக மக்களுக்கு எதிரான விரோதம், 1970களின் நடுப்பகுதியில் முனைப்படைந்து, பல்வேறு வழிகளில் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது. குறிப்பாக, தோட்டங்களில் இருந்து அவர்களை விரட்டும் நிகழ்ச்சி நிரல், புதிய கட்டத்தை அடைந்தது.