மகிந்தவின் கோமாளிக்கொள்கை! – மனோ கணேசன்!

தமிழ்மொழி வேண்டாம் என்று கூறும் மகிந்த ராஜபக்சவுக்கு தேங்காய் உடைக்க தமிழ் கடவுள் மாத்திரம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் இது மகிந்தவின் கோமாளிக் கொள்கை என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரச கரும மொழி ஆணைக்குழுவின் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மொழி உரிமை கொள்கையை அமுல்படுத்தி தமிழ் மக்களின் இதயங்களை முதலில் வென்றுவிட்டே அடுத்த கட்டம் குறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்த அவர் மொழி உரிமை கொள்ளை நடைமுறைப்படுத்தாதவிடத்து இனப்பிரச்ிசனையை தீர்க்க வாய்பில்லை என்றும் கூறினார். கடந்த காலங்களில் தமிழ் பிரதேசங்களில் மேடைகளில் ஏறி தமிழ் பேசியவர்கள், இன்று தமிழ் மொழியை எதிர்க்கிறார்கள் என்று கூறிய மனோ, இந்துக் கடவுளான விஸ்ணுவையும் காளியையும் தேடிச் சென்று தேங்காய் உடைக்கிறார்கள் என்றும் இது என்ன கோமாளிக் கொள்கையோ? என்றும் மேலும் குறிப்பிட்டார்.