மகிந்தவை பின் பின்வரிசைக்கு தள்ளிய பொன்சேகா! அமைச்சு பதவி என்ன?

ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தனவின் வெற்றிடத்திற்காகவே சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆறாவது வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும் நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன வராத காரணத்தினால் பொன்சேகா அவருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இதேவேளை மறைந்த குணவர்தனவின் அமைச்சர் பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை எனவும், அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நலன்புரி அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் யுத்தத்தை வென்று கொடுத்த இராணுவ தளபதியின் உறுப்புரிமையை நீக்கி பொன்சேகா சிறைக்கு அனுப்பி பழிவாங்கப்பட்டார். இது 2009ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக போட்டியிட்ட காரணத்திலாகும். தற்போது பொன்சேகா அமைச்சராகும் போது மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சியில் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சாதாரண உறுப்பினராகும் நிலை ஏற்படும். மஹிந்த ராஜபக்சவின் மோசடிகளுக்கமைய அவர் சிறை செல்ல நேரிட்டுள்ள நிலையில் தன்னை பழிவாங்குவதாக அவர் கூச்சலிட்டு வருவதாகவும், உருவாகும் புதிய அரசியல்வாதிகளுக்கு இவை அனைத்து ஒரு சிறந்த பாடமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.