மன்னார் நகரில் பசுமையான நகரத் திட்டம்

மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பொது இடங்களில் கழிவு பொருள்களை தரம் பிரித்து சேகரிக்கும் வகையில், மன்னார் நகர சபையால் குறித்த  குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆரம்ப நிகழ்வு, மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இன்று (24) காலை இடம்பெற்றது.