மருதானையில் எதிர்ப்பு பேரணி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து மருதானையில் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பில் அமைந்துள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை மூடுமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டது. குறித்த இந்த பேரணியில் 500 மாணவர்கள் வரை கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.