மலையகத்தில் புதியக் கட்சிகள்?

மலையகத்தின் பிரதான கட்சிகள் சிலவற்றில் இருந்து விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் சிலர், புதிய கட்சிகளை உருவாக்கும் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கட்சிகளை உருவாக்கி அதனூடாக மக்கள் சேவைகளை முன்னெடுக்க இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சக்திகள் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன என்றும் இரகசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.