மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம்

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயர், லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று மாற்றப்படும் என நிதியத்தின் தற்போதைய தலைவரும் வர்த்தக அமைச்சருமான டொக்டர் பந்துல குணவர்தன, இன்று (12) தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, பல்கலைக்கழக கல்வி வாய்ப்பைப் பெறும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் நிதியத்தைத் தொடங்கிய மறைந்த வர்த்தக அமைச்சர் லலித் அதுலத்முதலிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பெயர் மாற்றம் இடம்பெறுவுள்ளதாகத் தெரிவித்தார்.