மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு சபாநாயகர் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது கோரியதாகத் தெரியவருகிறது. இதேவேளை, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவாக, மஹிந்த அமரவீரவை ஏற்குமாறும், அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.