மஹிந்த தலையை மைத்திரியிடம் வழங்கியதற்கு சமால் சாட்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதற்கு முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஸவே சாட்சி என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவை யாரும் அச்சுறுத்தவில்லை எனவும் மிகவும் சுமூகமான முறையில் கட்சித் தலைமப் பதவி ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் இல்லத்தில், மஹிந்த மைத்திரியிடம் கட்சித் தலைமைப் பொறுப்பினை வழங்கிய போது கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியை பிளவடையச் செய்வது இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார். இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியமில்லை எனவும் கட்சித் தலைமைக்காக போராடுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.