மஹிந்த முகவருக்கு இடமாற்றம்!

மஹிந்த அரசினது முக்கிய முகவராக இருந்து யாழ் தொழில் நுட்பக்கல்லூரியில் செயற்பட்டு வந்த அதன் அதிபர் என். யோகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அசைக்க முடியாததொரு நபராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய முதல் இராணுவ அதிகாரிகள் வரை நெருக்கமாக இருந்து வந்திருந்த யோகராஜன் தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு படுதோல்வியும் அடைந்திருந்தார். இந்நிலையில் தொழில்நுட்பக்கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ் தொழில் நுட்ப்பக்கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜன் இன்று (26) திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்திற்காக தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்கும் சதி முயற்சியிலும் இணைந்து செயற்பட்டிருந்த அவர் படையில் கூலித்தொழிலாளிகளாக இணைப்பதற்கான மையமாக தொழில்நுட்பக்கல்லூரியை பயன்படுத்த அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.