மஹிந்த வருகையை எதிர்த்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்?

கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. தண்ணீருக்கு பதிலாக துப்பாக்கி தோட்டாவை வழங்கிய ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்து தட்டிகளை ஏந்தியுள்ள மக்கள், மகிந்த ராஜபக்ச தமது பிரதேசத்திற்கு வருகை தரக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சுத்தமான குடிநீர் கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பாடசாலை மாணவன் உட்பட இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.