மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும்

மாகாண சபைத் தேர்தல்களுக்கு கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது. அது ஜனநாயக செயற்பாடுகளில்  அடிப்படையை மீறுவதாகும் என  முன்னாள் மத்திய மாகாண சபைத் தலைவர், துரை மதியுக ராஜா தெரிவித்தார். இன்று (19)  கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.