மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை!

காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, தொழில் துறையிலும் வளர்ந்து வருகிறது. இதனால், அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங் உள்பட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக அதிகமான புகை வெளியேறுகிறது. மேலும், வீடுகளில் குளிர் காய்வதற்காக நிலக்கரி எரிப்பதிதாலும் அதிக புகை வெளியேறுகிறது. இதனால், அங்கு காற்றில் மாசு பெருகி உள்ளது.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சீனா தலைவர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், அங்கு பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்களுக்காக, கனடா நாட்டிலுள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து சுத்தமான காற்றை பாட்டில் அடைத்து, கனடா நாட்டு தனியார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

லேக் லூயிஸ் மலையின் காற்று இந்திய மதிப்பின்படி ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இதைவிட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்று சுமார் 10 மணி நேரம் வரை இருக்கும் .