மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்-கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி

மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீ.நிகால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (6) காலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.