மாஸ்கோவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் 1 லட்சம் கேமராக்கள்

மாஸ்கோவில் சுமார் 1 லட்சம் கேமராக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.