மீண்டும் கொழும்பில் சீனக் கடற்படைக் கப்பல்?

சீனக் கடற்படையின் மிகப்பெரிய மருத்துவமனைக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு இன்று வந்துள்ளது. சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில், சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 865 என்ற இலக்கமுடைய இந்த மருத்துவமனைக் கப்பல், சுமார் 30 ஆயிரம் தொன் எடை கொண்டதாகும். 14 மருத்துவமனை அலகுகளைக் கொண்ட இந்தக் கப்பலில் உலங்குவானூர்தி தளம், மற்றும் கட்டுப்பாட்டுக் கோபும் என்பனவும் உள்ளன. சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனக் கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வருவது இது இரண்டாவது தடவையாகும்.