மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஜெகதீஸ்வரன் அனித்தா மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகிய தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பில் கலந்துகொண்ட ஜெகதீஸ்வரன் அனித்தா 3.55 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளார். தான் 3.48 மீற்றர் உயரத்தை முன்னர் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தாண்டி சாதனை படைத்தையே அனித்தா தற்போது முறியடித்துள்ளார்.