மீள இயங்கவுள்ள ரயில் சேவைகள்

கொவிட் 19 பரவலையடுத்து தற்காலிகாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை, நாளை (12) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 36 ரயில் சேவைகள் நாளை முதல் மீள சேவையில் ஈடுபடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.