முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ”உங்களில் ஒருவன்” வரலாற்று நூலை வெளியிடுகிறார் ராகுல் காந்தி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகத்தை, நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிடுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், “உங்களில் ஒருவன்” என்ற பெயரில் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. “உங்களில் ஒருவன்” வரலாற்று நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை – நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நாளை (பிப்ரவரி 28) மாலை நடைபெற உள்ளது.