முதல்வர் ஸ்டாலின் : இணைய திமுக தொண்டர்களுக்கு அறிவுரை + எச்சரிக்கை! பொய்களுக்கு பதிலடியாக உண்மைகளை பரப்புங்கள்

திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் மாநில செயலாளராக இருந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று (பிப்ரவரி 5) தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின்.