முல்லையின் எதிர்காலம் தொடருக்கு விண்ணப்பம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால், முல்லையின் எதிர்காலம் எனும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், புதுக்குடியிருப்பு, விசுவமடு ஆகிய பிரசித்திபெற்ற இடங்களை மய்யப்படுத்தி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.