முள்ளிவாய்க்காலில், உயிரை தக்கவைக்க முனைந்த அனைத்து தமிழ் மக்ளுக்கும் எதிராகவே அவர்கள் துப்பாக்கிப்பிரயோகம்

அரசும் புலிகளும் செய்துகொண்ட சமாதன உடன்படிக்கை காலத்தில், ஆயிரக்கான தமிழர்கள் மட்டும் புலிகளால் துரோகி என முத்திரை குத்தி கொல்லப்பட்டார்கள்.

இதை விட ,முஸ்லீம்கள், சிங்களவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கொன்று குவித்த புலிகளின் வீர வரலாறு தனியானவை.

முள்ளிவாய்க்காலில், உயிரை தக்கவைக்க முனைந்த அனைத்து தமிழ் மக்ளுக்கும் எதிராகவே அவர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததும், கொன்றதும் அவர்களின் கடைசி வரலாறு.

புலிகள் அதிகாரத்தில் இன்றிருந்தால் ,முள்ளி வாய்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இணையாக , அனைத்து தரப்பு மக்களையும், அவர்கள் இல்லாத இந்த ஒன்பது வரிட காலத்தில் , வகை தொகையின்றி கொன்று குவித்திருப்பார்கள்.

கொலைகாரர்களின் கணக்கு வேறாகவும் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனியாகவும் எழுதப்பட்டிருகின்றன , தியாகிகளின் கணக்கில் மட்டும் மக்களைத்தவிர அவர்கள் மட்டுமே உள்ளனர்.

புலிகளே இலங்கைத்தமிழ் மக்களின் வரலாறு என்றுதான் இன்றுள்ள தமிழ்தேசிய அடிபொடிகளும், வரட்டு மாக்சிய விற்பன்னர்களும் திருப்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்,

வரலாறு என்பது கொலைகாரர்கள் கொல்லுவதற்கான போராட்டம் அல்ல . அது மனிதர்கள் உயிர்வாழுவதற்கான போராட்டம்.

(Annam Sinthu Jeevamuraly)