முஸ்லிம் அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவியேற்பு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஜுன் மாதம் 3ஆம் திகதி அமைச்சரவை, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தனர். அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகிய இருவரும் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், எஞ்சியிருந்த 7 பேர் தமது பதவிகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுள்ளனர்.