மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்

ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார். கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.