மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜெயசீலன் இராஜினாமா

மூதூர் பிரதேச சபையின் உறுப்பினராக 26 மாதங்கள் இருந்த புத்திசிகாமணி ஜெயசீலன் தான் பதவி விலகுவதாக, திருகோணமலை, சுங்க வீதியிலுள்ள மல்லிகா மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அறிவித்தார்.

கேடயம் சுயேச்சைக் குழு சார்பில் போட்டியிட்ட இவர், தனது சுயேச்சைக் குழு தெரிவித்ததற்கு இணங்க, இரண்டு வருட கால பதவியை ஓர் உறுப்பினருக்கு வழங்கும் பொருட்டு, இப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
You May Also Like