மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது?

மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய ரஷ்யப் படைகள், போகப்போக அப்பாவி மக்களையும் தங்கள் குண்டுகளுக்குக் குறியாக்கிக் கொல்லத் தொடங்கின.