’மொட்டு வேட்பாளரில் மாற்றமில்லை’

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமது வேட்பாளர் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என, கெஹலிய குறிப்பிட்டுள்ளார்.