’மோடியின் குளறுபடிகள் இலங்கையிலும்’

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக  இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.