யாழில் வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இன்று முதல் 50 வீதமளவில் இயங்குமென யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்துள்ளார்.