யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

இன்று (25) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும் சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.