யாழ். – கொழும்பு ரயில் சேவை புதன் மாலை ஆரம்பம்

இதற்கமைய, புதன்கிழமை (03) மாலை 5.30 மணிக்கு, கொழும்பு – கல்கிசையில் இருந்து புறப்படும் ரயில் யாழ். – காங்கேசன்துறையை வந்தடைந்து, மறுநாள் வியாழக்கிழமை (04)  காலை 5.30 மணியளவில்  காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு, கொழும்புக்கு பயணிக்கவுள்ளது எனவும், அவர் கூறினார்.

‘எனினும், இன்று வரை முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, புதன்கிழமை ஆரம்பமாகும் ரயில் சேவையானது, வழமைபோல் இடம்பெறவுள்ளது.

யாழில் இருந்து கொழும்புக்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழுக்கு ஒரு சேவையுமாக சாதாரண பரயில் சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது’ என, அவர் மேலும் தெரிவித்தார்.