யாழ்.சிறுவன் கொழும்பில் நிர்க்கதி

படத்தில் இருக்கும் சிறுவனை இனங்கண்டால், அதுதொடர்பில் அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது. பகிரப்பட்டுள்ள அந்தத் தகவல்களின் பிரகாரம், படத்தில் இருக்கும் சிறுவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வேலை ஒன்றுக்காக அழைப்பிக்கப்பட்டுள்ளார். எனினும், அழைத்தவர்கள் அச்சிறுவனை வந்து அழைத்துச் செல்லவில்லை.