யாழ் போதனா வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இன்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் கலந்து கொண்டிருந்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.