யாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு கடந்த 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 1 குடும்பமும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்கைதிகளுடன் பழகிய நபர் என்பதால், விடுதலை செய்யப்பட்டவர் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.