யாழ். மாநகர சபைக்கு முதல்வர் யார்?

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று (31) இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.