யாழ் மாநகர சபை செய்யவேண்டியவை

யாழ் மாநகரம் நுளம்பு குப்பைமேடு அசுத்தமான குடி நீர் நோய் எனதிணறுகிறது. குருநகர் நாவாந்துறை காக்கைதீவு பொம்மைவெளி மக்களின் அவலங்கள் சொல்லி மாளாது. ஒரு சுத்தமான கழிப்பறையை யாழ் நகரில் கண்டுபிடிக்க முடியாது. நகருக்கு வருபவர்கள் உடல் உபாதைகளை அவஸ்தைகளை சகித்தாக வேண்டும். அனால் பெரும் எதிர்பார்ப்புடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநகரசபையில் சிலர் சமாதி கட்டுவதற்கும் சிலைகட்டுவதற்கும் மிருகசாலை அமைப்பதற்கும் பரிந்துரை செய்கிறார்கள். வடக்கு மாகாண சபை போல் மாநகரசபையும் கீழ்வாந்து போய்விடக்கூடாது. மாநகர சபை 4 ந்தர கபடதாரி அரசியல் செய்யும் இடமல்ல. இந்த மாதிரி தான் ஆரம்பம் என்றால் யாரும் மாநகர சபைக்கு உதவ முன் வர மாட்டார்கள்.
இப்படியான அராஜக போக்குகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தார்மீக அற சமூக பிரக்ஞை கொண்ட உறுப்பினர்கள் பெருமளவில் மாநகர சபையில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த திருகுதாள விளையாட்டுகளுக்கு இடமளிக்க கூடாது.

(Sritharan Thirunavukarsu)