யாழ். மாநகர சபை மேயர் தெரிவு 30இல் இடம்பெறும்

2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக, வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கான தெரிவு, டிசெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார்.