ரணிலின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

வவுனியாவுக்கு இன்று பிற்பகல் வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.