ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரை

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக ரணிலை பெயரிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. எனினும், ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம் கிடைக்கும் வரையில் அந்த நடவடிக்கை தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் குறித்த தீர்மானம் கட்சிக்கு அறியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.