ராகுல் காந்தி என்ற மக்கள் தலைவன்

“நீ இந்தியா முழுதும்
எங்குவேண்டுமானாலும் நடக்கலாம்.
ஆனால், ஜம்மு கஷ்மீரில் கூடாது.
நீ அங்கு நான்கு நாள்களும்
காரில் பயணிப்பது நல்லது.

நடந்து சென்றால்
உன் மீது
குண்டுகள் வீசப்படும் அபாயம் இருக்கிறது!

அவர்கள் அவ்விதம் சொன்னது
என்னை பயமுறுத்துவதற்காகக்கூட
இருக்கக்கூடும்.

நான் இப்படி நினைத்தேன் :
“நான் என் சொந்த வீட்டுக்குச் செல்கிறேன்,
என் சொந்த மக்களுடன் நான்கு நாள்கள் நடக்கப்போகிறேன்.

அதிகாரிகள் சொன்னதுபோல,
வெறுப்பாளர்கள் என் மீது
குண்டெறிவார்கள் என்றால்,
என் வெள்ளைச் சட்டையை
குருதியால் சிவப்பு நிறமாக்க –
அவர்களுக்கு நாம் ஒரு
வாய்ப்பை அளிப்போம்!”

வாழ்ந்தால் அச்சமின்றி வாழவேண்டும்; இல்லையென்றால் –
அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை.

இதைத்தான் காந்திஜியும்
என் குடும்பத்தாரும்
எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

என்னதான் நடக்கிறது பார்ப்போமே
என்றுதான் நான்
ஜம்மு கஷ்மீருக்குள் நடந்தேன்.

நான் நினைத்துதான் நடந்தது.
ஜம்மு கஷ்மீர் மக்கள்
என்மீது –
கையெறி குண்டுகளை வீசவில்லை.

இதயம் திறந்த அன்பை
வாரி வழங்கினார்கள்.
தங்களில் ஒருவனாக
என்னை நினைத்தார்கள்.

குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை,
கண்களில் கண்ணீருடன்
என்னை வரவேற்றார்கள்.

நான் மிகுந்த
மகிழ்ச்சியடைந்தேன்.

நான் உறுதியாகச் சொல்லுவேன்,
பாரதிய ஜனதாவின் ஒரு தலைவரும் –
இத்தனை மக்களுடன் இணைந்து –
ஒரு நாலடிகூட நடக்கமாட்டார்கள்.

காரணம், மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்
என்று பொருளல்ல.

அவர்களுக்குள் இருக்கும் அச்சம்!”

இந்திய ஒற்றுமைப் பயணத்தின்
இறுதிநாளில் ஸ்ரீநகரில்

ராகுல் காந்தி.

படத்தில் – ராகுலுடன் –
நடந்தும் காரில் தொடர்ந்தும்
பாரத் ஜோடோ யாத்திரையில்
உணர்வுப்பூர்வமாகப் பங்கெடுத்த
கிர்த்திகா தரன்.

(Rathan Chandrasekar)