ரூ.100 கோடி நட்டஈடு கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ்

டுபாய் எக்ஸ்போ 2022இல் கலந்து கொண்டு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். 

முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.