வடக்கின் உதவிக்கரங்கள்…

நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வடமாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றினால் அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள், இன்று பிற்பகல் 2 மணியளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து, தெற்கை நோக்கிப் புறப்பட்டன. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் தலையீட்டின் கீழ், இந்த நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)