வடமாகாண மக்களின் தீராத வலிகளை ஆற்றுப்படுத்துவேன்

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸை வரவேற்கும் நிகழ்வு, வவுனியாவில், தமிழ் விருட்சத்தின் தலைவர் செ. சந்திரகுமார் தலைமையில், இன்று (02) நடைபெற்றது. இதன்போது, ஏற்புரை நிகழ்த்திய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய வடமாகாண ஆளுநர், பாரிய பொறுப்பொன்று தனக்குச் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய சேவைக் காலம் இன்னும் முடிவுறவில்லையெனவும், இளைப்பாறுவதற்கு முன்பே தான் இளைப்பாற வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.