வட்டுக்கோட்டை கல்லூரியை கையகப்படுத்த நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது, வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை, தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்தரையாடி கையகப்படுத்தவுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார். அத்துடன், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அவர் கூறினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.