வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்

வல்வெட்டித்துறையில், வருடாந்தம் தைப்பொங்கல் தினத்தில; நடத்தப்படும் பட்டத் திருவிழா, இந்த ஆண்டும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது.   வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் வருடாந்தம் பட்டத் திருவிழா நடைபெறுவது வழமை.   இந்த நிலையில், அந்தப் பகுதி மக்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவுக்கும் இடையில், நேற்று முன்தினம் (05) நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரமே, பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டது.   அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கடந்த ஆண்டும் பட்டத் திருவிழா நடைபெறவில்லை.   இதேபோன்று, இந்த ஆண்டிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பட்டத் திருவிழாவை இடைநிறுத்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.   இதையடுத்தே, பட்டத் திருவிழா இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அண்மையில், இந்தப்  பட்டத் திருவிழாவை இந்த ஆண்டு சர்வதேச பட்டத் திருவிழாவாக இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.    இந்த விடயம் பல எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.