வழமையாக பறக்கும் ரஷ்ய விமானத்திற்கு துருக்கி மறுப்பு

ரஷ்யாவின் வழக்கமான இராணுவ கண்காணிப்பு விமானம் ஒன்றுக்கு தனது வான்பகுதியால் பறப்பதற்கு அனுமதி வழங்க துருக்கு மறுத்துள்ளது. இது ஒரு அபாயகரமான செயல்முறை என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரிய எல்லையில் வைத்து கடந்த நவம்பர் 24 ஆம் திகதி ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டுவீழ்த்தியது தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றின்படி இரு நாடுகளின் கண்காணிப்பு விமானங்களுக்கு வான் பகுதியை திறந்துவிட ஒப்புக்கொண்டிருந்தபோதும் துருக்கி ஊடாக ரஷ்ய விமானம் பறப்பதையே அது நிராகரித்துள்ளது. உடன்பாடு எட்டபடவில்லை என்றும் விமானம் பயணிக்க முடியாது என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. துருக்கி, ரஷ்யாவுக்கு இடையிலான உடன்பாடு கடந்த 2006 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்ததோடு அது தொடக்கம் ஆண்டுதோறும் சராசரியாக ரஷ்யாவின் இரு கண்காணிப்பு விமானங்கள் துருக்கி வானூடாக பறந்தன.