வாகனங்களை எல்லைக்கருகில் நகர்த்திய சீனா

சீனாவால் இம்மாதம் ஒன்பதாம் திகதிக்கும் 16ஆம் திகதிக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளின் நீட்சியை செய்மதிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

வாகன நகர்வு, இருப்பிட மாற்றத்துக்கும் மேலாக இந்திய, சீனப் படைவீரர்களிடையே இம்மாதம் 15ஆம் திகதி மோதல் நடைபெற்றிருக்கக்கூடிய சிதைவுகள் உள்ள இடங்களை செய்மதிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தியதுடன், கல்வான் நதியின் பாய்ச்சலை குலைக்க முயலும் சீனாவின் நகர்வும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.