வாக்குறுதிகளை இலங்கை செயற்படுத்த வேண்டும்!

மனித உரிமை பற்றிய வாக்குறுதிகளை இலங்கை செயற்படுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயன்முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் அந்த தீர்மானப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்ற போதிலும், சொற்பளவான நடவடிக்கைகளே இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சில மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் முன்னேற்றம் பதிவாகியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை என்ற போதிலும், இன்னமும் பல்வேறு விடயங்களில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.