விதிகளை மீறுவோருக்கு இனி வீடு தேடி வரும்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சு, விதிகளை மீறுவோருக்கான அபராதச் சீட்டுகளை அவர்களது வீட்டுக்கு அனுப்பவும் பொலிஸ் திணைக்களம் விரைவில் ஒரு அமைப்பை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.