விளாமரம்

சிறுவயதில் “இது யானை தின்ற விளாம்பழம்” என்று பாரமற்ற விளாம்பழம் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்துக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கமுடியாத வயது. விளாத்தி இலைகளை ஆடுகள் சுவைத்து உண்பதைக் கண்டிருக்கிறேன். அவை எப்படி இலைகளுக்குள் மறைந்துள்ள முட்களைத் தவிர்க்கின்றன என்பது அதிசயம். விளாம்பழத்தின் காய் கொண்ட துவர்ப்பும், அதற்கு உப்பிட்டு உண்டதும், பழத்தைச் சீனி போட்டு உண்டதும் நினைவில் நிற்கின்றன.